/ Sep 22, 2025

Thamileelaarasiyalthurai.info

RECENT NEWS

“வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தை தணிக்கைக் குழுமம் தடை செய்கிறது

18.09.2025

தமிழீழத் தேசியப் படைப்புக்களுக்கான தணிக்கை குழுமம் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை தடை செய்தது!

பேரன்புக்குரிய படைப்பாளிகளே!

இன்றைய வர்த்தக உலகில், வர்த்தக நலன் மற்றும் தனிமனித அபிலாசைகளுக்கு அப்பால் நின்று,
உண்மை, நேர்மை, பக்கச்சார்பின்மை ஆகிய உயரிய பண்புகளை வரித்து, அடக்கி ஒடுக்கப்படும் எமது மக்களின் விடிவிற்காகப் படைப்பாளிகள் செயற்பட வேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம். நீங்கள் எந்த சக்திகளிடமும் அடிபணிந்து விலை போகாமல், உண்மையின் பக்கம், நீதியின் பக்கம் நின்று இன அழிப்புக்குள்ளான மக்களின் குரலாக, உங்களது படைப்புகள் வெளிவர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அவ்வாறான திரைப்படைப்புக்களை உருவாக்குகின்ற படைப்பாளிகளின் கரங்களை இறுகப் பற்றிக் கொள்ள நாங்கள் எப்போதும் தயாராகவுள்ள அதே வேளையில், எமது தமிழீழத்தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும், எமது கலை, பண்பாட்டு விழுமியங்களுக்குப் பங்கம் விளைவிக்கும் திரைப் படங்கள் அனைத்தையும் தடை செய்வதோடு, ‘வெந்து தணிந்தது காடு” திரைப்படத்தையும் தடை
செய்கின்றோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

அறிக்கை ( PDF )
வெந்து தணிந்தது காடு

2023ம் ஆண்டு யூலை மாதத்தில் வெளியிடப்பட்ட இப்படத்திற்கான தடை அறிக்கைகள்.

அறிக்கை 1

அறிக்கை 2

அறிக்கை 3

Pirabu K

RECENT POSTS

CATEGORIES

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *