/ Aug 07, 2025
30.01.2025
இலங்கையின் பழம்பெரும் தமிழ் அரசியல் கட்சிகளில் ஒன்றான, தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், பல தடவைகள் தமிழ் மக்களின் பாராளுமன்றப் பிரதிநிதியாக நாடாளுமன்றம் சென்ற முன்னாள் தமிழ் மக்களின் பிரதிநிதியும், தமிழ் மக்களுக்காக குறிப்பிட்ட சில ஆண்டுகள் சிறை வாழ்க்கையை அனுபவித்தவரும், தமிழீழத் தேசியத் தலைவரால், ஒக்ரோபர் 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது, அதன் செயலாளராகப் பொறுப்பேற்று, தன்னால் முடிந்தளவு ஒத்துழைப்பை நல்கியிருந்தவருமாகிய, மூத்த தமிழ் அரசியல்வாதி ஒருவரை, கடந்த 29.01.2025 அன்று இழந்துவிட்டோம்.
இவரது இழப்பு எமக்கும், ஈழத் தமிழ் மக்களுக்கும் ஆழ்ந்த கவலையளிக்கிறது. அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தின் துயரில், தமிழீழ மக்களோடிணைந்து தமிழீழ அரசியல் துறையினராகிய நாமும் உளமாரப் பங்கெடுத்துக் கொள்கின்றோம். இவருடைய இறுதிக் கால அரசியல் செயற்பாடுகளில் எமக்கு ஏற்புடமை இல்லாவிட்டாலும், எமது இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
தமிழீழ அரசியல்துறை
அனைத்து நாடுகள்
Copyright © 2025 Thamileelaarasiyalthurai.info